இந்தியாவிலேயே தமிழகம் படுமோசம்: ஆய்வறிக்கை பகீர் தகவல்!

இந்தியாவிலேயே தமிழகம் படுமோசம்: ஆய்வறிக்கை பகீர் தகவல்!

Share it if you like it

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் தகவல் அறியும் உரிமை சட்டம் படுமோசமாக இருப்பதாக ஆய்வறிக்கை ஒன்று பகீர் தகவலை தெரிவித்துள்ளது.

இந்திய அரசியல் சாசன சட்டத்தில் குறிப்பிட்டுள்ள சமத்துவம், சமூகநீதி, இறையாண்மை மற்றும் சுதந்திரம் போன்ற அம்சங்களை நிறைவேற்ற தகவல் உரிமை சட்டம் அவசியமாகிறது. இந்த சட்டத்தின் கீழ், எந்தவொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தகவல்களை சாமானிய மனிதனும் பெறும் உரிமை உண்டு.

அந்த வகையில், அரசு அலுவலகத்திலுள்ள பணி ஆவணங்கள், பதிவேடுகளை மேலாய்வு செய்வதற்கு, ஆவணங்கள் அல்லது பதிவேடுகளின் குறிப்புகளை எடுத்தல், சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுதல் மற்றும் பொருட்களின் சான்றளிக்கப்பட்ட மாதிரிகளைப் பெறுதல் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு கூறலாம். உதாரணத்திற்கு – ( அரசு கட்டிடம் கட்டும் போது சிமெண்ட் கலவை மாதிரிகளைப் பெறுதல்)

இப்படிப்பட்ட சூழலில், தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப்  பொறுத்த வரையில் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மிகவும் மோசமாகச் செயல்படுகிறது அந்த ஆய்வறிக்கை பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின், நிலைமை இவ்வாறு இருக்க இந்தியாவிலேயே, நம்பர் ஒன் முதல்வரை கொண்ட கட்சி நாங்க தான் என தி.மு.க.வினர் கம்பு சுற்றி வருகின்றனர் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it