தமிழக ஆளுநருக்கு எதிராக தி.மு.க.வினர் போராட்டம் செய்ய கூடாது என முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு அதிரடி உத்தரவிட்டிருக்கிறார்.
2023 – ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டசபை கூட்டதொடர் ஆளுநர் ஆர்.என்.ரவி. தலைமையில் நேற்றை தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஆளுநரை தமிழக முதல்வர் ஸ்டாலின், சபாநாயகர் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேரந்த எம்.எல்.ஏ.க்கள் திட்டமிட்டு அவமதிப்பு செய்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவையின் மரபுகளை தி.மு.க. மீறி விட்டது என்பதே தமிழக மக்களின் கருத்தாக உள்ளது.
தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவையில் நடந்து கொண்ட விதம் தற்போது மக்களிடம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. எம்.எல்.ஏக்களுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார் ;
ஆளுநருக்கு எதிராக போஸ்டர்களை அடிக்க வேண்டாம். பேரவையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை தாக்கி பேச கூடாது என கண்டிப்புடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.