திராவிட மாடலுக்கு குட் பை… நான் மிகப்பெரிய பாவம் செய்து விட்டேன்: வின்சென்ட் ராஜ் ஆவேசம்!

திராவிட மாடலுக்கு குட் பை… நான் மிகப்பெரிய பாவம் செய்து விட்டேன்: வின்சென்ட் ராஜ் ஆவேசம்!

Share it if you like it

தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக சமூக செயற்பாட்டாளர் வின்சென்ட் ராஜ் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர் மற்றும் சமூகநல ஆர்வலராக இருப்பவர் வின்சென்ட் ராஜ். இவர், தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து அவர் தனது சமூகவலைத்தள பக்கமான முகநூலில் இவ்வாறு பதிவிட்டுள்ளளார்

அவரின் முகநூல் பதிவு இதோ ;

கடுமையான மன உளைச்சலில் இருக்கின்றேன்.வேங்கை வயல் கிராமத்தில் பாதிக்கப்பட்ட தலித் மக்களையே போலீசார் குற்றவாளிகளாக சித்தரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. மொத்தம் 8 பேரினை தலித் தரப்பில் விசாரணை என்கிற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து இரவு 12 வரை 3 நாட்கள் விசாரித்து உள்ளனர். இதில் 15 வயது சிறுவனும் விசாரிக்கப்பட்டு இருக்கிறான்.

இந்தியாவில் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்க செய்து விசாரணை செய்வது இதுவே முதல் தடவை. விசாரணையில் மலத்தை வரைந்து காட்டுங்கள் என்று கூறி இருக்கின்றனர். அதுமட்டும் அல்ல, நீங்களே மலத்தை கொட்டிவிட்டு அடுத்தவர்கள் மேல் பழி போடுகிறீர்களா என்று என்று கேட்டு கொடுமை செய்து உள்ளனர். ஆபாசமாகவும் பேசி இருக்கின்றனர். வீடியோவை ஆன் செய்துவிட்டு பதிவு செய்யும்போது சிரித்து கொண்டும் வீடியோவை ஆப் செய்துவிட்டு மிரட்டியும் போலீசார் நடந்து கொண்டனர்.

பாதிக்கப்பட்ட அனைத்து தலித்துகளிடமும் வாக்குமூலம் பெற்று இருக்கிறோம். சுமார் 70 புகார்கள் அனுப்பி இருக்கிறோம். வேங்கைவயல் வன்கொடுமையை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். வேங்கை வயல் கிராமத்தில் மொத்தம் 20 குடும்பங்கள்தான் தலித்துகள். அவர்கள் யாரும் அற்ற அனாதைகளாக இருக்கின்றனர். தமிழக அரசு மீது நம்பிக்கை இல்லை. நீதி மன்றம் தானாகவே முன் வந்து இந்த வழக்கினை விசாரிக்க வேண்டும்.

கடந்த 10 நாட்களாக மிகப்பெரிய துயரத்தில் இருக்கிறேன். நமது கடைசி நம்பிக்கை நீதி மன்றம்தான். திராவிட மாடலுக்கு குட் பை. நீங்கள் எல்லாம் நன்றாக இருங்கள். நான் செய்த மிகப்பெரிய பாவம் தேர்தல் சமயத்தில் உங்களுக்கு வாக்கு கேட்டது. அதற்காக மன்னிப்பும் கேட்டு கொள்ளுகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.

நெறியாளர் செந்திலின் மிக நெருங்கிய நண்பரான வின்சென்ட் ராஜ் விடியல் ஆட்சியை கேள்வி கேட்க துவங்கியுள்ளார். அதுபோல, சீப்பு செந்தில் கேள்வி கேட்பாரா? என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.

/https://www.facebook.com/kathir.vincentraj


Share it if you like it