அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஈ.வெ.ரா. சிலையை அப்புறப்படுத்திய அரசு அதிகாரிகள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு இருப்பது காரைக்குடி மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை: காரைக்குடி அருகே கோட்டையூர் உதயம் நகரை சேர்ந்தவர் இளங்கோவன். இவர், திராவிடர் கழகத்தை சேர்ந்தவர். இவர், தாம் புதிதாக கட்டிய வீட்டின் ‘காம்பவுண்டு’ சுவரில் ஈ.வெ.ரா.வின் சிலையை நிறுவி இருக்கிறார். முறையான அனுமதியின்றி ஈ.வெ.ரா.வின் சிலை நிறுவப்பட்டுள்ளதாக கூறி காவல்துறையினர் உடனே அச்சிலையை அப்புறப்படுத்தி இருக்கின்றனர்.
இதனை கண்டித்து, இளங்கோவன் காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வகையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, விடியல் அரசு கொடுத்த அழுத்தம் காரணமாக, காரைக்குடி தாசில்தார் கண்ணன் மற்றும் காரைக்குடி பொறுப்பு டி.எஸ்.பி. கணேஷ் குமார் உள்ளிட்டவர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
அனுமதியின்றி ஈ.வெ.ரா. சிலை அமைத்த இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடிமை. அதைவிடுத்து, நேர்மையாக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மீது தனது கோவத்தை ஸ்டாலின் அரசு காட்டியிருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.