கோவிலுக்குள் சென்ற பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தி.மு.க. நிர்வாகி அவமதிப்பு செய்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில், சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அதேவேளையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் கொடுமைகள் தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்தவகையில், சேலம் மாவட்டம் திருமலைகிரியல் புகழ் பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும் சொந்தமான கோவில் என்று சொல்லப்படுகிறது. இதனால், இக்கோவிலுக்கு வேறு எந்த ஜாதியினரும் செல்வதில்லை. இந்த நிலையில், ஊர் கட்டுப்பாட்டை மீறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அக்கோவிலுக்கு சென்று இருக்கிறார். இதையடுத்து, கடந்த 27- ஆம் தேதி ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் அந்த இளைஞரை கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், சேலம் தெற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் என்பவர் ஊர் முன்னிலையில் அந்த இளைஞரை நிற்க வைத்து ஆபாசமாகவும், அருவருப்பான வார்த்தைகளால் வசைபாடியிருக்கிறார். மேலும், அங்கு நின்றுகொண்டு இருந்தவர்களின் முன்னிலையில் அந்த இளைஞரையும் அவரது தந்தையையும் திட்டியுள்ளார். இக்காணொளிதான் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஏதேனும் சிறு தவறு நடந்துவிட்டால் அலறி துடிப்பவர் திருமாவளவன். விடிந்தும் விடியாத விடியல் ஆட்சியில் பட்டியல் சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து வி.சி.க. தலைவர் எப்போது? பேசுவார் என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.