தி.மு.க.வின் கருத்து கேட்பு கூட்டம்…தெறிக்கவிட்ட பா.ஜ.க. மீனவ பிரதிநிதி!

தி.மு.க.வின் கருத்து கேட்பு கூட்டம்…தெறிக்கவிட்ட பா.ஜ.க. மீனவ பிரதிநிதி!

Share it if you like it

பேனா நினைவு சின்னம் தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகி முனுசாமி தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ள காணொளி தற்போது வைரலாகி வருகிறது.

தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு மக்களின் வரிப்பணம் பல வகையிலும் வீணடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ 2,00, 000-க்கும் மேல் கடன் உள்ளது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த ஆண்டு கூறியிருந்தார்.

இருப்பினும், விடியல் அரசு அதுகுறித்து எல்லாம் கவலைப்படாமல் 2,500 கோடியில் சென்னையில் பூங்கா, 100 கோடியில் ஈ.வெ.ரா-விற்கு சிலை, 39 கோடியில் கலைஞருக்கு நினைவிடம் மற்றும் 80 கோடியில் எழுதாத பேனாவிற்கு சிலை என்று பல்வேறு வெட்டி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 80 கோடி செலவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக ’பேனா நினைவு சின்னத்தை அமைப்பது தொடர்பாக மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டத்தை சென்னை திருவல்லிகேணியில் தமிழக அரசு நடத்தி இருந்தது. இதில், மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் என ஏராளமாவனர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மீனவர் பிரிவு தலைவருமான எம்.சி.முனுசாமி கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசும் போது,

திருவள்ளுவர் சிலையை விட கருணாநிதிக்கு ஏன்? உயரமான சிலை அமைக்க வேண்டும். அவரை, விட கருணாநிதி உயர்ந்தவரா? என்று முனுசாமி கேள்வி எழுப்பினார். இதனால், கோவமடைந்த தி.மு.க. குண்டர்கள் அவரை பேச விடாமல் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காணொளிதான் தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it