லவ் ஜிகாத்துக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் பேரணி!

லவ் ஜிகாத்துக்கு எதிராக ஹிந்து அமைப்புகள் பேரணி!

Share it if you like it

லவ் ஜிகாத்துக்கு எதிராக, ஹிந்து அமைப்புகள் மும்பையில் நேற்று நடத்திய பேரணியில் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கலந்து கொண்டது அனைரையும் பிரமிக்க வைத்தது.

இந்தியாவில் லவ் ஜிகாத் என்கிற பெயரில், இஸ்லாமிய இளைஞர்களால் ஹிந்து பெண்கள் காதல் வலையில் வீழ்த்தப்பட்டு, மதமாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அதேபோல, லவ் ஜிகாத் மூலம் காதல் வலையில் வீழ்த்திய இளைஞர்கள், அப்பெண்களை கொலை செய்வதும், இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்களுக்கு செக்ஸ் அடிமைகளாக விற்பதும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு செக்ஸ் அடிமைகளாக அனுப்பி வைப்பதும் தொடர்கதையாக இருக்கிறது. தவிர, பணம், பரிசுப் பொருட்கள் கொடுத்தும் மதம் மாற்றுவதும் அரங்கேறி வருகிறது. ஆகவே, இஸ்லாமிய இளைஞர்களிடமிருந்து ஹிந்து பெண்களை காக்கும் வகையில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும், லவ் ஜிகாத்துக்கு எதிராகவும் ஹிந்து அமைப்புகள் சார்பில் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சகால் ஹிந்து சமாஜ் சார்பில், ஹிந்து ஜன் ஆக்ரோஷ் மோர்ச்சா பேரணி நடத்தப்பட்டது. மும்பை தாதரில் தொடங்கிய இப்பேரணி பிரபாதேவி காம்கார் மைதானத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில் வி.ஹெச்.பி., பா.ஜ.க., பஜ்ரங்தள் உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், ஹிந்துக்கள் என லட்சக்கணக்கானோர் காவி உடையணிந்தும், காவிக் கொடியேந்தியும் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பிரபாதேவி காம்கார் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. தெலங்கானாவைச் சேர்ந்த பா.ஜ.க. பேச்சாளர் ராஜா சிங் கலந்துகொண்டு பேசினார். இவர், முகமது நபிக்கு எதிராகப் பேசியதற்காக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பா.ஜ.க.வில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

ராஜா சிங் பேசுகையில், “லவ் ஜிகாத் நிறுத்தப்படவில்லை என்றால் இங்கு தற்போது ஏற்பட்டிருக்கும் தீப்பிழம்பு எரிமலையாக மாறும். மத்திய அரசு லவ் ஜிகாத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். ஹிந்து பெண்களை முஸ்லிமாக மாற்ற சதி நடக்கிறது. சிமி அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு, லவ் ஜிகாத்தை கையில் எடுத்திருக்கின்றனர். இதற்காக வெளிநாட்டிலிருந்து நிதி பெறுகின்றனர். எனவே, ஹிந்துக்கள் முஸ்லிம் வியாபாரிகளுடன் வர்த்தகம் செய்யக் கூடாது. முஸ்லீம்களை புறக்கணிக்க வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஆசிஷ் ஷெலார், ராஜ் புரோஹித், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியின் சிவசேனா தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.


Share it if you like it