சீனாவின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான குவான்யின் சிலையை கழக கண்மணிகள் போட்டோஷாப் செய்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது, ஆட்சியில் வெட்டி விளம்பரங்களும், ஸ்டிக்கர் ஒட்டும் சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், கொரோனா தொற்று தமிழகத்தில் உச்சத்தில் இருந்த சமயத்தில், தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்தது.
தமிழக மக்களுக்கு, ரிலையன்ஸ் நிறுவனம் செய்த உதவிக்கு அம்பானியின் புகைப்படத்தை பயன்படுத்தாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இன்று வரை போர் உக்கிரமாக நடைபெற்று வருகிறது. போர் மேகம் சூழ்ந்து இருந்த சமயத்தில், கூட இந்திய மாணவர்களை மோடி அரசு பத்திரமாக தாயகம் அழைத்து வந்தது. என்னவோ தாங்களே உக்ரைன் சென்று தமிழக மாணவர்களை மீட்டு வந்தது போல ஸ்டாலின் அரசு அதிலும் ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம்தான் கொடுமையிலும் கொடுமை.
இப்படிப்பட்ட சூழலில் தான், கழக கண்மணிகள் சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதியின் ’பேனா சின்னம்’ இப்படிதான் அமைய உள்ளது என அதுகுறித்தான புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அந்த புகைப்படம் சீனாவில் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான குவான்யின் சிலையை கழக கண்மணிகள் போட்டோஷாப் செய்துள்ளனர் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.