பால்வளத்துறை அமைச்சரின் மகன் ஆசிம் ராஜாவை தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் நீக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர் ஆவடி நாசர். இவரது, மகன் ஆசிம் ராஜா. இவர், மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. அந்தவகையில், கமிஷன், கலெக்சன், அடிதடி, கட்டபஞ்சாயத்து என பல்வேறு குற்றச்சாட்டுகளை கழக கண்மணிகள் கூறி வந்தனர். அமைச்சர் மகனின் அட்டூழியங்களை கட்சி மேலிடத்திற்கு பலர் புகாராக தெரிவித்துள்ளனர். மேலும், அரசு அதிகாரிகள் ஆசிம் ராஜாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளனர். இதன்காரணமாக, மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் கிடப்பில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் ஆசிம் ராஜாவை சத்தமில்லாமல் கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். கட்சி மேலிடத்தின் இந்த அதிரடி நடவடிக்கை அமைச்சர் ஆவடி நாசருக்கு கடும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியுள்ளது.