மது விற்பனையை அதிகரிக்காத 48 ஊழியர்களுக்கு நோட்டீஸ்!

மது விற்பனையை அதிகரிக்காத 48 ஊழியர்களுக்கு நோட்டீஸ்!

Share it if you like it

சேலத்தில் மது விற்பனையை அதிகரிக்காத 48 ஊழியர்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருப்பது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் இன்று உலகிற்கு வழிகாட்டியாக இருந்து வருகிறது. ஆனால், திராவிட ஆட்சியில் தமிழ் கலாச்சாரம் கேலி, கிண்டல்களுக்கு உள்ளாகி வருவது சமூக ஆர்வலர்களையும் கடந்து பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள் கூறியிருந்தனர். தி.மு.க.வின் போலி வாக்குறுதியை நம்பி அப்பாவி தமிழக மக்கள் தி.மு.க.வை அரியணையில் அமர்த்தினர்.

இதையடுத்து, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அந்த வகையில், விடியல் ஆட்சி அமைந்து இரண்டு வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. எனினும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தாம் கொடுத்த வாக்குறுதியை இன்று வரை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தான், சேலம் மாவட்டத்தில் மது விற்பனையை அதிகரிக்காத 48 ஊழியர்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். இச்சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்தான, கூடுதல் விவரங்களுக்கு பத்திரிகை செய்தியின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image
Image
Image

Share it if you like it