நேர்மையான பத்திரிகையாளர் முதல்வரிடம் எழுப்பிய கேள்வி?

நேர்மையான பத்திரிகையாளர் முதல்வரிடம் எழுப்பிய கேள்வி?

Share it if you like it

இலவச லேப்டாப் குறித்து வின் டிவி நிருபர் எழுப்பிய கேள்விக்கு மழுப்பலான பதில் அளித்த தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

விடியல் ஆட்சியில் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்பது துளியும் இல்லை. இந்த ஆட்சியின் அவலத்தை சுட்டிகாட்டிய சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள், அரசியல்வாதிகள், யூ டியூபர்ஸ் மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அளவிற்கு தி.மு.க. தனது கோர முகத்தை காட்டி வருகிறது.

அதேவேளையில், விடியல் அரசிற்கு முட்டு கொடுக்கும் சில்லறை போராளிகள், ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நெறியாளர்களுக்கு தேவையான சலுகைகளை ஸ்டாலின் அரசு வழங்கி வருகிறது. அதேவேளையில், தி.மு.க.வின் அவலத்தை தட்டிக் கேட்கும் நிருபர்களும் இருந்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் அண்மையில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார். அப்போது, வின் டிவி நிருபர் எழுப்பிய கேள்வி? மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ’லேப்டாப் திட்டம்’ கைவிடப்பட்டதா? என்ற கேள்வியை முன்வைத்து இருக்கிறார்.

இதற்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது ; அரசியல் கேள்விகளுக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வின் டிவி நிருபர் எழுப்பிய கேள்வியை அரசியலோடு முதல்வர் ஒப்பிட்டு பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it