மதுகுடிப்பது தீங்கு என சமூக ஆர்வலர் ஒருவர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்துள்ளார். இதனை, கண்டுகொள்ளாமல் மதுபிரியர்கள் வரிசையில் நின்ற காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு உண்டு என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார். எனினும், இந்த அரசு அமைந்து இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்ய உள்ளன.
இதுவரை பூரண மதுவிலக்கு இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. குடும்ப பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் குடிக்கும் காணொளிகள் இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். இதுஒருபுறம்இருக்க, மது கடைகளின் எண்ணிக்கையை விடியல் அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது.
இதில், ஒரு கொடுமை என்னவென்றால், சேலம் மாவட்டத்தில் மது விற்பனையை அதிகரிக்காத 48 ஊழியர்களுக்கு டாஸ்மாக் அதிகாரிகள் அண்மையில் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக, தமிழகத்தில் நிலைமை இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், தமிழகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், மதுவின் தீமை குறித்து தொண்டை கிழிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்து வருகிறார். இதனை, துளியும் கண்டுக்கொள்ளாமல் மதுபிரியர்கள் வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கி சென்ற சம்பவம்தான் கொடுமையிலும் கொடுமை என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.