தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர்களின் வாழ்வும் அம்போ?

தி.மு.க. ஆட்சியில் ஆசிரியர்களின் வாழ்வும் அம்போ?

Share it if you like it

தி.மு.க அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஆசிரியர்கள்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி தெளித்து இருந்தார். இதனை, நம்பிய அப்பாவி பொதுமக்கள் விடியல் கிடைக்கும் என்று தி.மு.க.வை அரியணையில் அமர வைத்தனர். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு அவரது உண்மையான சாயம் வெளுக்க ஆரம்பித்து விட்டது. இதன்காரணமாக, வாக்களித்த பொதுமக்கள் ஸ்டாலின் அரசு மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். அந்தவகையில், தி.மு.க அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி இருக்கும் காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து, ஆசிரியர் ஒருவர் கூறியதாவது;

மறு நியமன தேர்வு எழுத வேண்டுமாம். நாங்கள் 12-வது வகுப்பு முடித்து இருக்கோம். டிடெட் தேர்வினை எழுதி இருக்கோம். இதுதவிர, டிகிரி முடித்து இருக்கோம். மேலும், பி.எட் முடித்து இருக்கோம். இதையெல்லாம் தாண்டி தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இருக்கிறோம். இது எல்லாம் போதாது டீச்சர் போஸ்டிங் வேண்டும் என்றால் நியமன தேர்வு எழுத வேண்டும் என்று கூறுகிறார்கள்.

2018-ல் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மறு நியமன தேர்வு எழுத வேண்டும் என்று ஜி.ஓ போட்டு இருந்தார்கள். இதற்கு, எங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தோம். இதையடுத்து, அரசு மேற்கொண்டு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால், இந்த உத்தரவு வந்த பிறகு அப்பொழுதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மறுநியமன தேர்வு என்பது சமூக நீதிக்கு எதிரானது இம்மக்களை சாக அடிப்பதற்கு சமம் என்று கூறியிருந்தார்.

நீங்கள் கவலைப்படாதீர்கள் கழக ஆட்சி அமைந்த பின்பு உங்களுக்கு நல்ல நீதியை வழங்குவேன் என ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தாக விடியல் அரசுக்கு எதிராக போராடும் ஆசிரியர் உருக்கமுடன் பேசியிருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் மட்டும் துண்டு சீட்டை பார்த்து தப்பும் தவறுமாக படிப்பாராம் ஆனால், ஆசிரியர்களுக்கு மட்டும் தேர்வுக்கு மேல் தேர்வு வைப்பாராம் என்று நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.


Share it if you like it