தமிழகத்தின் கனிமவளங்கள் மாற்று பாதையில் கேரளாவிற்கு கடத்தப்படுவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி மக்கள் விரும்பும் ஆட்சியாக இல்லை. அதனை மெய்ப்பிக்கும் வகையில், கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் பெண்களின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக மாறி உள்ளது. இதுதவிர, ஆற்றுமணல் கொள்ளை, கனிமவள கொள்ளை தமிழகத்தில் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இதனிடையே, கனிமவள கடத்தலை இன்னும் 20 நாட்களுக்குள் முற்றிலும் தடுக்க வேண்டும். இல்லையெனில், 21-வது நாள் சோதனை சாவடிகளில் பா.ஜ.க. தொண்டர்களோடு தொண்டனாக நானும் களம் இறங்குவேன் என தி.மு.க. அரசிற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில், கிராம நிர்வாக அலுவர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது.
இப்படிப்பட்ட சூழலில், கனிமவள திருட்டு தொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் செல்வகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.