தற்காலிக பஸ் ஸ்டாண்டில் முறைகேடு?: கோதாவில் குதித்த தோழர்கள்!

தற்காலிக பஸ் ஸ்டாண்டில் முறைகேடு?: கோதாவில் குதித்த தோழர்கள்!

Share it if you like it

தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக தி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்கள் பகீர் புகாரை தெரிவித்துள்ளனர்.

தி.மு.க. ஐ.டி. விங் மாநிலச் செயலாளராக இருப்பவர் டி.ஆர்.பி.ராஜா. இவர், தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான டி.ஆர்.பாலுவின் மகன். மேலும், இவர் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார்.

ராஜாவை பொறுத்தவரை அடாவடி, திமிர் பிடித்த பேர்வழி என்கிறார்கள் அவரது நெருங்கிய வட்டாரத்தினர். இதனிடையே, மன்னார்குடி தொகுதியில் தொடர்ச்சியாக 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். மக்களுக்கு செய்த சேவையை விட, ட்விட்டரில் கம்பு சுற்றுவதையே தனது முழுநேர தொழிலாக கொண்டவர் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அந்தவகையில், பொய்களையும், கட்டுகதைகளையும் அவிழ்த்து விடுவதில் இவருக்கு நிகர் இவரே என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இதுதவிர, இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்தவகையில், மன்னார்குடி நகராட்சி சார்பில் ரூ.1.24 கோடி செலவில் ருக்குமணி குளம் கரைகளை வலுப்படுத்தும் விதமாக கல் சுவர் அமைக்கும் பணி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடைபெற்று வந்தது. இப்படிப்பட்ட சூழலில், அப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குளத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தகுதியில்லாத ஒப்பந்தகாரர்களை பணியில் அமர்த்தியதே இதற்கு முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டி இருந்தனர். மேலும், டி. ஆர்.பி. ராஜாவிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில் தான், தி.மு.க. கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் மன்னார்குடியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். அதாவது, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின்கீழ் சுமார் ரூ.27 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தான், புதிய பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வரும் வரை, மன்னார்குடி நகராட்சி சார்பில், ரூ. 85 லட்சம் ரூபாய் செலவில், தேரடி வீதியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தில் தான் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் பகீர் புகாரை கிளப்பி விட்டு இருக்கின்றனர்.

Image


Share it if you like it