பெண் போலீஸ் அதிகாரிகளுக்கே இந்த நிலைமையா!

பெண் போலீஸ் அதிகாரிகளுக்கே இந்த நிலைமையா!

Share it if you like it

நேற்றைய முன்தினம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த பெண் போலீஸ் அதிகாரிகளை தி.மு.க.வினர் மிரட்டிய சம்பவம் அடங்கிய காணொளிகள் தொடர்ச்சியாக சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது தமிழக காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நேர்மையான முறையில் செயல்படுவோம் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் மக்களுக்கு வாக்குறுதியை அளித்தார். இதனை நம்பி விடியல் கிடைக்கும் என்று மாற்றத்தை விரும்பிய தமிழக மக்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது என்பது நிதர்சனம். பெண்கள், பள்ளி செல்லும் பெண் குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கொலை, கொள்ளை, துப்பாக்கி கலாச்சாரம் ஆளும் கட்சியின் ஆட்சியில் அராஜகம் தலைவிரித்து ஆடும் நிலை உருவாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் பலர் வேதனை தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தமிழக மக்கள் தற்பொழுது நன்றாகவே உணர்ந்துள்ளனர். தமிழக காவல்துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் முழு கட்டுபாட்டில் இல்லை. மக்களுக்கு உரிய பாதுகாப்பினை தமிழக அரசால் வழங்க முடியவில்லை என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக பொதுமக்கள் மட்டுமில்லாமல், காவல்துறையினருக்கும் உரிய மரியாதையும், பாதுகாப்பும் இல்லாத அவலநிலை உருவாகியுள்ளது.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தோழர்கள் காவல்துறையினரை மிரட்டும் விதமாகவும், அவமதிக்கும் வகையிலும் பேசும் காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அந்த வகையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்ற பொழுது. தென்காசி தி.மு.க. மாவட்டச் செயலாளர், பெண் போலீஸ் உயர் அதிகாரியை மிரட்டி இருந்தார். இந்த நிலையில் தான் தமிழக பெண் காவல்துறை உயர் அதிகாரிகளை தி.மு.க-வினர் மிரட்டும் காணொகளிகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Share it if you like it