அநியாயமா ஒரு உயிரை கொன்னுட்டீங்களே..!

அநியாயமா ஒரு உயிரை கொன்னுட்டீங்களே..!

Share it if you like it

ஹிஜாப் குறித்து முகநூலில் பதிவிட்ட பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டம் சீகேஹட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஹர்ஷா. 26 வயது இளைஞரான இவர், டெய்லர் வேலை பார்த்துக் கொண்டு, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இளைஞர் பிரிவான பஜ்ரங்தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் நேற்று இரவு (பிப்.20-ம் தேதி) சீகேஹட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் ஒன்று அவரை வழிமறித்திருக்கிறது. ஹர்ஷா சுதாரிப்பதற்குள், அக்காரிலிருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல், பயங்கர ஆயுதங்களால் ஹர்ஷாவை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்று விட்டது.

கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த மாணவிகள் சிலர், ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர். ஹிஜாப்புக்கு போட்டியாக ஹிந்து மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்தனர். இதையடுத்து, சீருடை தவிர, வேறு எந்த ஆடைகளையும் மாணவி, மாணவிகள் அணியக் கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டது. இந்த விவகாரம் கோர்ட் வரை சென்றிருக்கிறது. இவ்வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை யாரும் மத அடையாளங்களை பிரதிபலிக்கும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டாம் என்று கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, வேண்டுமென்றே ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வந்தனர் அடிப்படைவாத மாணவிகள்.

இந்த விவகாரம் குறித்து ஹர்ஷா தனது முகநூல் பக்கத்தில் விமர்சனங்களை முன்வைத்து கருத்து பதிவிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்த கும்பல், ஹர்ஷாவை படுகொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகிறது. இதுகுறித்து ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ட்விட்டரில் தங்களது விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், ஒருவர் பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், “கர்நாடகாவில் பஜ்ரங்தள் ஆர்வலர் ஹர்ஷா, முகநூலில் பகிர்ந்ததற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். முகநூல் பதிவுகளால் இந்துக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், இந்த அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் உயிரைவிட கருப்புத் துணியை முக்கியமானதாகக் கருதுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it