தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்த தி.மு.க. அரசிற்கு ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதையடுத்து, வன்முறையை தூண்ட முயல்வதாக பா.ஜ.க. தலைவர் மீது விடியல் அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. தி.மு.க.வின் இந்த அடாவடி செயலுக்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், சமூக வலைதளங்களில் உலாவந்த வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை தற்போது தேசிய பிரச்சினையாகியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் நிலை குறித்து அண்ணாமலை தனது கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லாமல், வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தனது கடும் கண்டனத்தை தி.மு.க. அரசிற்கு தெரிவித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.