கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொண்டால் ஸ்டாலின் கூட பிரதமர் ஆகலாம் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன். இவர், மாற்று கட்சியை சேர்ந்தவர்களை தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்ய கூடியவர். அதே வேளையில், காங்கிரஸ் தலைவர்களையும், தனது கட்சியையும் விமர்சனம் செய்வதில் முன்னோடியாக இருப்பவர் என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், இக்காணொளி அமைந்துள்ளது. அதாவது, அண்மையில் பிரபல ஊடகமான தந்தி டிவிக்கு இ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி அளித்திருக்கிறார். அப்போது, பேசிய அவர் இவ்வாறு கூறினார் ;
இன்னும் ஒன்றை ஆண்டு காலம் இருக்கிறது. பல விஷயங்கள் விவாதிக்கப்படும். அதில், ஒரு முடிவு எடுக்கப்பட்டு ஸ்டாலின் தான் பிரதமர் என்று எல்லோரும் விரும்பினால் அந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும். மக்கள் எதனை விரும்புகிறார்களோ அதனை நோக்கி தான் எங்களது பயணம் தொடரும் என கூறியிருக்கிறார். இ.வி.கே.எஸ். இளங்கோவனின் இந்த கருத்து காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.