குடும்ப கட்டுப்பாட்டை முறையாக தமிழகம் கடைப்பிடிக்கிறது. அதனால் எம்.பிக்கள் பிரதிநிதித்துவம் குறைகிறது. அதன்மூலம், மோடி தொடர்ந்து பதவியில் இருக்க ஆசைப்படுவதாக தி.மு.க. எம்.பி. கூறியிருக்கிறார்.
தமிழகத்தில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள், வடமாநில தொழிலாளர்கள் குறித்து பேசிய காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தி.மு.க. மூத்த தலைவரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் தயாநிதி மாறன். இவருக்கு, தமிழ் ஒழுங்காக பேச தெரியாது என்பது அனைவரும் நன்கு அறிவர். அதிலும் குறிப்பாக, தமிழக முதல்வர் ஸ்டாலினை விட சிறந்த அறிவாளி தான் என்ற மமதை இவரிடம் இருப்பதாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், தயாநிதிமாறன் பேசிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன் சாராம்சம் இதுதான், குடும்ப கட்டுப்பாட்டை தமிழகம் சிறப்பாக கடைப்பிடித்து வருகிறது. அதன் மூலம் ஜனத்தொகை குறைகிறது. ஜனத்தொகை அடிப்படையில் எம்.பி.க்களின் பிரதிநிதிகள் இருப்பார்கள். ஹிந்தி அதிகம் பேசும் மாநிலங்களில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் அதிகம் இருக்கும். அதன்மூலம், தொடர்ந்து பதவியில் பிரதமர் மோடி நீடிப்பார் என்று தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பேசியிருக்கிறார்.
குடும்ப கட்டுப்பாட்டிற்கும், பிரதமர் மோடி தொடர்ந்து பதவியில் நீடிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அறிவுபூர்மாக தயாநிதி மாறன் பேசியிருக்கிறார். ஆகவே, ஈ.வெ.ராவிற்கு கொடுத்த யுனெஸ்கோ விருதை போல மிக உயரிய விருதை தி.மு.க. எம்.பி.க்கு வழங்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.