கடந்த 6 வருடத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என பா.ஜ.க. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, முதல்வராக யோகி ஆதித்யநாத் இருந்து வருகிறார். இவரது, ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக அம்மாநில மக்கள் கூறி வருகின்றனர். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் மறக்க முடியாத பரிசை கொடுக்கும் நபராக யோகி இருந்து வருகிறார்.
இதனால், சமூக விரோதிகள் பெரும் அச்சத்தில் இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், முதல்வர் யோகி ஆதித்யநாத் உ.பி. விவசாயிகள் குறித்து பெருமிதம் அடைந்து இருக்கிறார். அதாவது, ‘கடந்த 6 வருடங்களில், உ.பி.யில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை. முன்பு கடன்காரர்களையே விவசாயிகள் நம்பியிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பின்பு அவரின் திட்டங்களால் விவசாயிகள் பயனடையும் வாய்ப்பை பெற்றுள்ளனர் என கூறியுள்ளார்.
உ.பி. முதல்வர் யோகியை கிண்டல் செய்து வரும் தி.மு.க.வினர், ஈ.வெ.ரா.விற்கு 100 கோடியில் சிலை, கலைஞருக்கு 80 கோடியில் பேனா சின்னம், சென்னையில் 2,000 கோடியில் பூங்கா, என விடியல் அரசு வெட்டி செலவு செய்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.