பெண்களின் தாலியை அறுத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் மகளிர் தின கொண்டாட்டம் தேவையா? என்கிற ரீதியில் பிரபல திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பிரபல திரைப்பட இயக்குனராக இருப்பவர் தங்கர் பச்சன். இவர், தனது மனதில் பட்ட எண்ணங்களை துணிச்சலாகவும், அதிரடியாகவும் பேசக் கூடியவர். அந்த வகையில், மகளிர் தினத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளன. இப்படிப்பட்ட சூழலில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ;
மது, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பெண்களின் தாலியை அறுத்துக் கொண்டிருக்கிறது!நடுத்தெருவில் நிற்கும் அந்த குழந்தைகள், குடும்பங்களின் வாழ்வை பற்றி அக்கரை கொள்ளாமல் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். குடிநோயாளிகளால் வாழ்வை இழக்கும் குடும்பப் பெண்களுக்கு யார்தான் துணை? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தூத்துக்குடி எம்.பி. கனிமொழி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊர் தாலியை அறுத்து விட்டு, அரசின் கஜானாவை நிரப்பும் திராவிட அரசுகள் மகளிர் தினத்தை கொண்டாடுவது வேதனைக்குரியது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பெண்களின் தாலியை அறுத்து விட்டு மகளிர் தின கொண்டாடுகிறோம்..