வடமாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசிய காணொளியை வெளியிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்விகளை பிரசாந்த் கிஷோர் முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், இந்தியாவிற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும் தொடர்ந்து பேசக் கூடியவர். அந்தவகையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற பொதுகூட்டத்தில் வடமாநில தொழிலாளர்களை மிக கடுமையாக தாக்கி பேசியிருந்தார். இவரது, பேச்சு வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும், பயத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இதனிடையே, தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்களின் விவகாரம் பேசுப்பொருளாக மாறி இருக்கிறது. அந்தவகையில், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது உண்மைதான். அதுகுறித்தான, காணொளியை விரைவில் வெளியிடுவேன் என பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார். அதன்படி, தனது ட்விட்டர் பக்கத்தில் சீமான் பேசிய காணொளி மற்றும் வடமாநிலத்தை சேர்ந்தவரை தமிழர் ஒருவர் ரயிலில் தாக்கிய காணொளிகளை வெளியிட்டு உள்ளார்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை ஏன் இன்று வரை கைது செய்யவில்லை என முதல்வர் ஸ்டாலினுக்கு பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.