தீண்டாமை சுவரை அகற்ற கோரி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்து இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள கிராமம் புதுப்பட்டி. இவ்வூரில், பட்டியலின மக்கள் பெரும் அளவு வசித்து வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில், அங்குள்ள பொது வீதியை பயன்படுத்த விடாமல் தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை, உடனே அகற்ற வேண்டும் என அவ்வூர் மக்கள் அரசுக்கு மனு கொடுத்து இருக்கின்றனர். எனினும், அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனை, கண்டித்து அவ்வூர் மக்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் தான், அவர்கள் மீதே தி.மு.க. அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இதையடுத்து, அவ்வூரை சேர்ந்தவர்கள் சாகும் வரை தாங்கள் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளனர். இதுதான் திராவிட மாடல் அரசா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.