Share it if you like it
கோவையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் பலர் இணைந்தனர். அப்போது, முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார் ;
நாட்டில் எத்தனையோ கட்சிகள் உண்டு. வரலாற்றில் இடம்பிடித்த கட்சிகள் உள்ளன. சிலர் திடீர் திடீரென கட்சிகள் தொடங்குகின்றனர். கட்சி தொடங்கிய அடுத்த நாளே, நாங்கள் ‘ஆட்சியை பிடிப்போம். அடுத்த முதல்வர்’ தாங்கள் தான் என்று கூறுகின்றனர். அப்படி சொன்னவர்களின் நிலை இன்று என்னவானது என்பதை நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். முதல்வரின் இந்த கருத்து மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமலை நேரடியாக தாக்குவது போல அமைந்து இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it