வடமாநில தொழிலாளர்கள் மீது வன்மத்தை காட்டிய தி.மு..க. எம்.எல்.ஏ. வேல்முருகன் மீது எப்போது வழக்கு பதிவு செய்ய போறீங்க என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழகத்தில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவியது. இதையடுத்து, பலர் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தி.மு.க.வினர் வடமாநில தொழிலாளர்கள் மீது காட்டிய வன்மத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர். அந்த வகையில், இன்றுவரை பொதுமக்களிடையே அந்த காணொளிகள் பேசுப்பொருளாக இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், வடமாநில தொழிலாளர்களின் நலன் குறித்தும் தி.மு.க.வின் உண்மையான சுயரூபத்தை அண்ணாமலை அம்பலப்படுத்தினார். இதனால், உஷ்ணமடைந்த விடியல் அரசு அவர் மீது வழக்கு பதிவு செய்து தனது ஆணவத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.
இதனிடையே, தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனராக இருப்பவர் வேல்முருகன். இவர், உதயசூரியன் சின்னத்தில் நின்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் வென்றவர். அந்த வகையில், இவர் தி.மு.க. உறுப்பினர் ஆவார். இவர்தான், வடமாநில தொழிலாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் பேசி வருகிறார்.
வடமாநில தொழிலாளர்களின் நன்மைக்கா பேசிய பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது உடனே வழக்கு. வடமாநில தொழிலாளர்கள் மீது தொடர்ந்து வன்மத்தை பரப்பி வரும் தி.மு.க. எம்.எல்.ஏ. மீது எப்போது வழக்கு என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.