டாஸ்மாக் வருமானத்தை உயர்த்தும் வகையில், தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது என நிதியமைச்சர் சட்ட சபையில் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, உறுதியான நிலைப்பாடு இல்லாத கட்சி என்பது அனைவரும் அறிந்ததே. கொள்கை, கோட்பாடு என எதையும் கடைப்பிடிப்பது கிடையாது. ஆட்சியை பிடிக்க எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பது பரவலான கருத்தாக இருந்து வருகிறது. இது இன்று நேற்றல்ல, கருணாநிதி தலைமைப் பொறுப்புக்கு வந்த பிறகிலிருந்தே தி.மு.க. இப்படித்தான் இருந்து வருகிறது.
இதனிடையே, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் கூறியிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் தான், டாஸ்மாக் வருமானத்தை 45,000 கோடியில் இருந்து 50,000 கோடியாக உயர்த்த தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சர் சட்டசபையில் கூறியிருக்கிறார். இதுதான், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.