தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நடத்திய சமூகநீதி மாநாட்டை நெட்டிசன்கள் வசைமாரி பொழிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூகநீதி மற்றும் சுயமரியாதை பற்றி மூச்சுக்கு முன்னூறு தடவை உருட்ட கூடியவர்கள் தி.மு.க.வினர். எனினும், அதனை தாங்கள் மட்டும் பின்பற்ற கூடாது என்ற கொள்கையை இன்றுவரை கடைப்பிடித்து வருகின்றனர். விடியல் ஆட்சியில் சமூகநீதி துளியும் கிடையாது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சமூகநீதி பற்றி வாய்கிழியப் பேசும் தி.மு.க. ஆட்சியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்துத் தலைவர்கள் வரை தொடர்ந்து அவமதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் தான், 21 கட்சி தலைவர்களுடன் காணொளி வாயிலாக சமூகநீதி மாநாட்டினை முதல்வர் ஸ்டாலின் நடத்தி இருக்கிறார்.
தமிழகத்தில், அழிந்து வரும் சமூகநீதியை முதலில் காப்பாற்றி விட்டு, அதன்பிற்கு தேசிய அரசியலில் சமூகநீதியை பற்றி பேசலாம் என பலர் விடியல் முதல்வருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.