உதயநிதி மற்றும் சபரீசன் குறித்து நிதியமைச்சர் பேசிய ஆடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், அவரது பதவியை பறிக்க வாய்ப்பு உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நிதியமைச்சராக இருப்பவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். இவர், பத்திரிகையாளர் ஒருவரிடம் அண்மையில் செல்போனில் பேசினார். அதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதியும், மருமகன் சபரீசனும் கடந்த ஒரு வருடத்தில் 30,000 கோடி ரூபாய் பணம் சேர்த்துள்ளனர். அதற்கு, எப்படி கணக்கு காட்டுவது என தெரியாமல்? உள்ளனர் என்பது போல அந்த ஆடியோவில் அமைச்சர் பேசியுள்ளார்.
எப்படியோ இந்த ஆடியோ? சமூகவலைத்தளங்களில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில்தான், நிதியமைச்சரின் பதவியை பறித்து அதனை தங்கம் தென்னரசுவிடம் வழங்க போவதாக பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. ஆடியோவை தொடர்ந்து தற்போது பத்திரிகையில் வந்த செய்தியும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
