அருவருப்பின் உச்சக்கட்டம்: …. திமுககாரனுக்கு கூட சொல்ல இப்படி மனம் வராது – நாராயணன் திருப்பதி பாய்ச்சல்!

அருவருப்பின் உச்சக்கட்டம்: …. திமுககாரனுக்கு கூட சொல்ல இப்படி மனம் வராது – நாராயணன் திருப்பதி பாய்ச்சல்!

Share it if you like it

வி.சி.க. தலைவர் திருமாவளவனின் பேச்சிற்கு தமிழக பா.ஜ.க. துணை தலைவர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர், வி.சி.க. எம்.எல்.ஏ.க்களுடன் சென்று அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இதையடுத்து, அவர் பத்திரிகையாளர்களை சந்திதார். அப்போது, நிருபர் ஒருவர் வேங்கைவயல் தொடர்பாக திருமாவிடம் கேள்வி எழுப்பினார். நிருபரின், கேள்விக்கு பொறுப்பாக பதில் அளிக்காமல், அவருடன் கடும் வாக்குவாதத்தில் திருமாவளன் ஈடுபட்டார்.

இதற்குதான், தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு இதோ.

நிருபர் : இத்துனை நாட்கள் ஆகியும் வேங்கை வயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லையே?

தொல்.திருமாவளவன் : நாட்கள் ஆகிவிட்டது என்பது ஒரு பிரச்சினையில்லை. ராமஜெயம் கொலை வழக்கில் வருடங்கள் பல ஆகியும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கு உள்நோக்கம்

கற்பிக்க முடியுமா? நிர்வாக சிக்கல் இருக்கலாம். அரசு தலித்துகளுக்கு எதிராக இல்லை. வேங்கை வயல் பிரச்சினையில் யாரையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை. அரசு எதிராக, விரோதமாக இல்லை. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க காலக்கெடு ஏதும் இல்லை. பொறுமையாக கண்டு பிடிக்கட்டும்”

நிருபர் : தி.மு.க. கட்சியினர் போல் பேசுகிறீர்களே?

தொல்.திருமாவளவன் : “நான் என்ன தி மு க காரனா? அநாகரீகமாக பேசக்கூடாது.”ராமஜெயம் கொலை வழக்கு என்பது தனி நபர் விவகாரம். ஆனால், வேங்கை வயலில் குடிதண்ணீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த விவகாரம் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஒட்டு மொத்த கௌரவத்திற்கு நேர்ந்த அவலம், கொடூரம். அருவருப்பின் உச்சக்கட்டம்.

ஒரு கொலை வழக்கையும், இன அழிப்புக்கு ஒப்பான ஒட்டுமொத்த சமுதாயத்தை இழிவுபடுத்திய செயலையும் எப்படி ஒப்பீடு செய்ய முடியும்? குற்றவாளிகளை கண்டுபிடிக்க காலக்கெடு ஏதும் இல்லை என்றும் பொறுமையாக கண்டு பிடிக்கட்டும் என்று தி.மு.க.வை சார்ந்த ஒருவரே கூட கூறியிருப்பாரா என்பது சந்தேகமே!

ஒரு சமுதாயத்திற்கு நேர்ந்துள்ள கொடுமைக்கு தீர்வு காண நிர்வாக சிக்கல் தான் காரணம் என்றும், அரசு யாரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை என்று சொல்லி அறிவாலயத்தைவை காப்பாற்ற நினைப்பது அநாகரீகம் மட்டுமல்ல துரோகமும் கூட திருமா அவர்களே என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share it if you like it