சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செந்தில் பாலாஜியின் காணொளி!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செந்தில் பாலாஜியின் காணொளி!

Share it if you like it

தி.மு.க.வினர் மணல் அள்ள எந்த அதிகாரியாவது தடையாக இருந்தால் அவர் அங்கிருக்க மாட்டார் என செந்தில் பாலாஜி பேசிய ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. 10 வருடத்திற்கு பிறகு தி.முக. ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்த நிலையில், அகோர பசியில் இருக்கும் தி.மு.க.வினர் தொடர்ந்து சட்டத்திற்கு விரோதமான காரியங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், ஆற்று மணல், கனிம வளங்கள் உள்ளிட்டவற்றை அளவுக்கு அதிமாக அண்டை மாநிலங்களுக்கு கடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதனிடையே, தி.மு.க. சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவர் செந்தில் பாலாஜி. இவர், தேர்தல் பரப்புரையின் போது இவ்வாறு பேசினார் ; 11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான். தடுத்தா எனக்கு போன் போடுங்க அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில் தான், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே வி.ஏ.ஓ. லூர்தூ பிரான்சிஸ் என்பவர் சமூக விரோதிகளால் நேற்றைய தினம் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமாக மணல் திருட்டிற்கு லூர்து பிரான்சிஸ் பெரும் தடையாக இருந்து இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. லூர்தூ பிரான்சிஸ் கொலையில் தி.மு.க.வினர் யாரேனும் இருக்கிறார்களா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it