ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது தமிழக அரசாம்: நடிகர் சூர்யா ட்வீட்!

ஜல்லிக்கட்டு தடையை நீக்கியது தமிழக அரசாம்: நடிகர் சூர்யா ட்வீட்!

Share it if you like it

ஜல்லிக்கட்டு தடை நீக்கத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்தது. தமிழர்களுக்கு, இந்த கூட்டணி செய்த பச்சைதுரோகத்தை எந்த ஒரு தமிழனும் இன்றுவரை மறக்கவில்லை என்பதே நிதர்சனம். இதனிடையே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அந்த வகையில், பாரதப் பிரதமராக மோடி பதவியேற்றார். தொடர்ந்து, பா.ஜ.க. அரசு நடத்திய கடுமையான சட்டபோராட்டத்தின் வாயிலாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி கிடைத்தது. உண்மை இவ்வாறு இருக்க, வழக்கம் போல தி.மு.க. இதிலும் ஸ்டிக்கர் ஒட்ட துவங்கியுள்ளது.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், திராவிட நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் :

ஜல்லிக்கட்டு நம் கலாசாரத்துடன் ஒருங்கிணைந்தது என்பதை உணர்த்தும் படி உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. மாநில அரசுக்கு எனது வாழ்த்துக்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடைக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் தலை வணங்குகிறேன் என நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.


Share it if you like it