மதமாற்றத்துக்கு ஊக்கமளிக்கிறார் ஸ்டாலின்: வி.ஹெச்.பி. குற்றச்சாட்டு!

மதமாற்றத்துக்கு ஊக்கமளிக்கிறார் ஸ்டாலின்: வி.ஹெச்.பி. குற்றச்சாட்டு!

Share it if you like it

தமிழகத்தில் நடக்கும் மதமாற்றத்துக்கு ஊக்கமளிப்பதுபோல முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது சரியல்ல என்று விஷ்வ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச் செயலர் மிலிந்த் பிராண்டே குற்றம்சாட்டி இருக்கிறார்.

புதுச்சேரிக்கு வந்திருந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில், ”விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பில் 72 லட்சம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாட்டில் 150 இடங்களில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சிறப்பு பயிற்சிகள் நடந்து வருகின்றன. தேசிய உணர்வு, சுகாதாரம், உடல் பயிற்சி ஆகியவற்றை மையமாக வைத்து இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. வி.ஹெச்.பி. சார்பில் உலகளவில் 7,500 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களால் பட்டியலினத்தவர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பயனடைந்து வருகின்றனர். 2024 ஜனவரி 15-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவிருக்கிறது.

நம் நாட்டில் தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மதமாற்றம் நடந்து வருகிறது. கிறிஸ்தவ, இஸ்லாமிய அமைப்புகள் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அதிகளவில் மதமாற்றம் நடந்து வருகிறது. இதற்கு ஊக்கமளிப்பதுபோல முதல்வர் ஸ்டாலின் செயல்படுவது சரியல்ல. மத்திய அரசு மதமாற்றத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டாலும், மாநில அரசுகள் மனது வைத்தால்தான் மதமாற்றத்தை தடுக்க முடியும். கர்நாடகத் தேர்தலில் மக்கள் தேசப் பாதுகாப்புணர்வுடன் வாக்களித்திருக்க வேண்டும். அங்கு இஸ்லாமியர்கள் சார்பில் துணை முதல்வர், 4 முக்கிய துறை அமைச்சர்களுக்கு கோரிக்கை எழுந்திருக்கிறது. ஆகவே, தேசிய உணர்வோடு மக்கள் வாக்களிப்பது அவசியம்” என்றார்.


Share it if you like it