10 லட்சம் கோடி அம்போ: பாகிஸ்தானுக்கு ஆப்படித்த மோடி!

10 லட்சம் கோடி அம்போ: பாகிஸ்தானுக்கு ஆப்படித்த மோடி!

Share it if you like it

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ. 2,000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இதற்கு, செப்.30-ம் தேதி வரை கால அவகாசம் தரப்பட்டுள்ளது. புழக்கத்தில், இருக்கும் அனைத்து ரூ. 2000 நோட்டுகளையும் அகற்ற முடிவு செய்துள்ளோம். ஆகவே, வங்கிகள் அந்த நோட்டுகளை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இப்படிப்பட்ட சூழல் நிலையில், இந்த விவகாரம் பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியது. ரிசர்வ் வங்கியின் இந்த அதிரடி நடவடிக்கையை பொதுமக்கள், சாமானியர்கள் மற்றும் வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்புகள் வரவேற்றுள்ளன. எனினும், இதனை தி.மு.க., கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன

இந்த நிலையில்தான், திடுக்கிடும் தகவல் ஒன்று அம்பலமாகி இருக்கிறது. அதாவது, ரூ. 10 லட்சம் கோடிக்கு பாகிஸ்தானில் 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சிப்பட்டுள்ளன என்ற திடுக்கிடும் தவகல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்தான, செய்தியினை நெற்றிக்கண் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு மட்டுமில்லை மக்களின் பணத்தை சுருட்டி வைத்திருக்கும் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் சில்லறை போராளிகளுக்கும் சேர்ந்து பாரதப் பிரதமர் மோடி மிக சரியான ஆப்பு வைத்திருக்கிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it