நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயருக்கு கெட் அவுட்… கருணாநிதி பெயருக்கு கட் அவுட்?!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயருக்கு கெட் அவுட்… கருணாநிதி பெயருக்கு கட் அவுட்?!

Share it if you like it

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பெயரை இருட்டடிப்பு செய்ய முயலும் தி.மு.க. அரசு. பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரமான சேலத்தில் தற்போது பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சேலம் மாவட்டத்தின் மாநகர பகுதியில் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிநவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனை, எதிர்வரும் ஜூன் 11-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை வைக்க சேலம் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே, சேலம் போஸ் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பேருந்து நிலையம் என பெயர் வைக்க வேண்டும். அதேபோல, நேரு கலையரங்கம் இருந்ததன் காரணமாக புதிய கலையரங்கிற்கு நேருவின் பெயரையே வைக்க வேண்டும் என சேலம் கிழக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் வழித்தோன்றல் வாரிசுகள் நல சங்கம் சார்பாக மிகப்பெரிய கையெழுத்து இயக்கம் அண்மையில் நடைபெற்றது.

பல வருடமாக இருந்து வந்த போஸ் மைதானம் மற்றும் நேரு கலையரங்கத்தின் பெயர்களை மாற்றி புதிய பெயர்களை வைப்பது வரலாற்றை மாற்றும் செயல் இது என பா.ஜ.க. சுற்றுச்சூழல் பிரிவு மாநில தலைவர் ஆர்.பி. கோபிநாத் முதல்வருக்கு கடிதம் எழுதி உள்ளார். மீறி கருணாநிதியின் பெயரை வைக்கும் பட்சத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

/https://www.instagram.com/p/CtQkJU5SiUC/?igshid=MTc4MmM1YmI2Ng%3D%3D


Share it if you like it