கொடுங்கோலன் ஸ்டாலின் செய்த கொடுமைகள்!

கொடுங்கோலன் ஸ்டாலின் செய்த கொடுமைகள்!

Share it if you like it

ஜோசப் ஸ்டாலின் செய்த கொடுமைகள் பற்றிய சிறு குறிப்பு

ஜோசப் ஸ்டாலின் டிசம்பர் 18, 1879 அன்று ஜார்ஜியாவில் பிறந்தவர். இவரது, ஆட்சி “பயங்கரவாதத்தின் ஆட்சி” என்று சொல்லப்படுகிறது. 1930-ல் சோவியத் யூனியனில் தனது பிடியை இறுக்கியதை அடுத்து கட்சி, இராணுவம் மற்றும் சமூகத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் ஸ்டாலினால் சிறைபிடிக்கப்பட்டனர். இயைடுத்து, அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, தூக்கிலிடப்பட்டனர். சுமார் 7 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஸ்டாலின் தனது கொள்கைகளை எதிர்த்தவர்களை குறிப்பாக விவசாயிகளை படுகொலை செய்து இருக்கிறார். ஸ்டாலின், கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் 139 பேரில் 93 பேரைக் கொன்றார். கூடுதலாக, 103 ஜெனரல்கள் மற்றும் 81 அட்மிரல்களைக் கொன்றார்!

ஜோசப் ஸ்டாலின் பைத்தியக்காரனாகவும், இரக்கமற்றவராகவும், அதிகாரப் பசியுடனும் இருந்தவர். தனது சொந்த நாட்டு மக்களையே கொன்றவன். ஸ்டாலினின் ரகசியக் காவல்துறை அவரது கொள்கைகளை கடுமையாக அமல்படுத்தியது, கம்யூனிசத்தை எதிர்த்த மூன்று மில்லியன் மக்கள் சைபீரியாவின் குலாக் பகுதியில் வாழ வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பபடனர். கூடுதலாக, ஏழரை மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர்.

ஸ்டாலின் தனது இரண்டாவது மனைவியிடம் தவறாக நடந்து கொண்டவன். அவரது இரண்டாவது மனைவி நடேஷ்டா 1932 இல் தற்கொலை செய்து கொண்டார். ஸ்டாலின் மிகப்பெரிய சந்தேக பேர்வழி அவர் தனது சொந்தக் கட்சியில் உள்ள பலரை தனது எதிரிகளாக கருதியவர். இதுதவிர, பலரையும் கொன்று இருக்கிறார். இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான கொடூர ஆட்சியாளராக ஜோசப் ஸ்டாலின் இருந்து இருக்கிறார்.


Share it if you like it