ரூ. 200 துட்டு வாங்கல…. ஆனால் தரமாக செய்த  பீகாரிகள்!

ரூ. 200 துட்டு வாங்கல…. ஆனால் தரமாக செய்த பீகாரிகள்!

Share it if you like it

கோபேக் ஸ்டாலின் ஹேஷ் டேக் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எதிர்வரும் 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்த வகையில், பீகார் மாநிலத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த, கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சிறிய கட்சிகள் கலந்து கொள்கின்றன. அந்த வகையில், இக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை பீகார் மாநிலத்திற்கு செல்ல இருக்கிறார். இந்த நிலையில்தான், அம்மாநிலத்தை சேர்ந்த நெட்டிசன்கள் கோ பேக் ஸ்டாலின் என்று டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த, டுவிட்டர் பதிவு தி.மு.க. தலைமையை கடும் உஷ்ணத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

பாரதப் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் gobackmodi என்று டுவிட்டரில் டிரெண்டிங் செய்ய பீகாரிகளுக்கு தி.மு.க. பணம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், காசு வாங்காமல் கோ பேக் ஸ்டாலின் என பீகாரிகள் டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர். இதுதான் கர்மா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share it if you like it