பா.ஜ.க.விடம் நெருக்கம் காட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலினை, கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் மிரட்டியதை தொடர்ந்து அவர் அந்தர் பல்டி அடித்து இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சர்வதேச 44-வது செஸ் போட்டியை துவக்கி வைக்கும் விதமாக, பாரதப் பிரதமர் மோடி கடந்த 28. 07. 2022 அன்று சென்னை வந்தார். இந்நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசுடன், தொடர்ந்து மோதல் போக்கினை கடைப்பிடித்து வருபவர் ஸ்டாலின். ஆனால், இம்முறை அவரது பேச்சில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருந்தது என்பதே நிதர்சனம். பொதுவாக, மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என பேசி கூடிய ஸ்டாலின் இம்முறை ’இந்திய அரசு’ என பிரதமர் முன்னிலையில் பேசி இருந்தார். மேலும், செஸ் திருவிழா நடைபெறுவதற்கு மிக முக்கிய காரணமே பாரதப் பிரதமர் மோடி தான் என வெகுவாக பாராட்டி இருந்தார்.
தமிழகத்திற்கு, இது போன்ற எண்ணற்ற வாய்ப்பினை பாரதப் பிரதமர் மோடி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அப்போது வேண்டுகோள் விடுத்து இருந்தார். முதல்வரின், இந்த அணுகுமுறை தமிழக மக்களிடையே மிகப்பெரிய வியப்பினை ஏற்படுத்தி இருந்தன. பாரதப் பிரதமர் மோடி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட காங்கிரஸ், வி.சி.க, மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர்கள் செஸ் போட்டியின் துவக்க விழாவை புறக்கணித்து இருந்தனர். இந்த நிலையில் தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் மிக நெருக்கம் காட்டிய விதம் கூட்டணி கட்சிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.யை, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் டெல்லியில் சந்தித்து இருக்கிறார். அப்போது, பா.ஜ.க.விடம் முதல்வர் நெருக்கம் காட்டியது குறித்து கேள்வி எழுப்பியதாக சொல்லப்படுகிறது. இதே, கருத்தினை தமிழகத்தை சேர்ந்த கூட்டணி கட்சியின் தலைவர்கள் முன்வைத்து இருக்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால், மக்கள் நல கூட்டணியை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டி வரும் என எச்சரிக்கை விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஸ்டாலின் பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை. தி.மு.க. கூட்டணி தொடரும் என சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ம.தி.மு.க. வி.சி.க. கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் மிரட்டலுக்கு இப்படி பயப்படும் இவரை இனிமேல் தளபதி என்று அழைக்க கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.