நிதியமைச்சரின் பதிலால்… எடுத்தேன் பாரு ஓட்டம்!

நிதியமைச்சரின் பதிலால்… எடுத்தேன் பாரு ஓட்டம்!

Share it if you like it

தி.மு.க. எம்.பி.யின் குற்றச்சாட்டிற்கு, மத்திய அமைச்சர் பதில் அளிக்கும் முன்பே நாடாளுமன்றத்தை விட்டு கனிமொழி ஓட்டம் எடுத்து இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமாக இருப்பவர் கனிமொழி. இவர், தமிழக முதல்வர் ஸ்டாலினை காட்டிலும் பல மடங்கு பொய் மூட்டைகளை அவிழ்த்து விட கூடியவர் என்ற குற்றச்சாட்டு இவர் மீது உண்டு. அந்த வகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகளை உடனே மூடுவோம் என்று கூறியிருந்தார். இந்தியாவிலேயே, அதிக விதவைகள் உள்ள மாநிலம் தமிழகம் இதை பற்றியெல்லம் இந்த அ.தி.மு.க. அரசிற்கு கவலையில்லை என கனிமொழி குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக ஸ்டாலின் இருந்து வருகிறார். விடியல் ஆட்சி அமைந்து ஒரு வருடத்தை கடந்து விட்டது. இருப்பினும், மதுக்கடைகளை மூட தி.மு.க. அரசு முன்வரவில்லை என்பதே கசப்பான உண்மை.

இதனிடையே, தி.மு.க. எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டவர்கள் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அண்மையில் சந்தித்தனர். இதையடுத்து, அமைச்சர் சந்திப்புக்கு பின்பு வெளியில் வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் கனிமொழி. அப்போது, வின் டிவி நிருபர், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பெண் விதவைகள் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக சொன்னீர்களே இப்போது, குறைந்து விட்டார்களா என கேள்வி எழுப்பினார். இதனை சற்றும் எதிர்பார்க்காத கனிமொழி மழுப்பலான பதிலை கொடுத்து விட்டு அங்கிருந்து ஓட்டம் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான், தி.மு.க. எம்.பி. கனிமொழி ஜி.எஸ்.டி.யை மையமாக வைத்து பல்வேறு கேள்விகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்து இருக்கிறார். இதனையெல்லாம், பொறுமையாக கேட்டுக் கொண்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனை தொடர்ந்து, கனிமொழியின் பொய் குற்றச்சாட்டிற்கு அவர் பதில் அளிக்க முயன்று இருக்கிறார். அப்போது, தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் உடனே அவையை விட்டு ஓட்டம் எடுத்து இருக்கின்றனர். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Image

Share it if you like it