ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்!

ஈயம் பூசுன மாதிரி இருக்கணும்… பூசாத மாதிரியும் இருக்கணும்!

Share it if you like it

கோவை மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அந்த வகையில், முதல்வர் செல்லும் சாலையில் உள்ள தடுப்பு சுவர்களுக்கு மட்டும் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. விடியல் கிடைக்கும் என்று நம்பிய மக்களுக்கு திருட்டு மற்றும் இருட்டு மட்டுமே பரிசாக கிடைத்து இருக்கிறது. இதுதவிர, மக்களின் அடிப்படைவசதிகள் முறையாக நிறைவேற்றப்படவில்லை. அந்தவகையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாலை விரிவாக்க பணியின் போது சாலையின் நடுவில் 8 மின் கம்பங்கள் வைத்து சாலை அமைக்கப்பட்டு இருந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Image

இந்த சம்பவத்தின் தாக்கம் குறையாத நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கோவை மாவட்டத்திற்கு சென்று இருக்கிறார். அந்த வகையில், ஈச்சனாரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விதமாக ராமநாதபுரம் – போத்தனூர் சாலை வழியாக முதல்வர் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அந்த சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும், சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளுக்கு பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தான், முதல்வர் செல்லும் சாலையின் பக்கம் உள்ள தடுப்பு சுவர்களுக்கு மட்டும் பெயிண்ட் அடிக்கப்பட்டு இருக்கிறது. மறுபுறம் பெயிண்ட் அடிக்காமல் விடப்பட்டு இருக்கிறது. இதனை, யாரோ ஒருவர் புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இதுதான், தற்போது தமிழகம் முழுவதும் பேசுப் பொருளாக மாறி இருக்கிறது. ஒருபுறம் தரமற்ற சாலைகள் மறுபுறம், தடுப்பு சுவர்களில் தில்லாலங்கடிதனம், இது கூட தெரியாத ஒரு முதல்வர் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதனிடையே, தமிழக முதல்வரின் கூட்டத்திற்கு ஆட்களை சேர்க்கும் விதமாக, தனியார் பள்ளியின் பஸ்களை தி.முக. தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இருக்கிறது. இதனால், மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், முதல்வரின் வருகையையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இதனால், பொதுமக்கள் கடும் இன்னலை சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து, கோபேக் ஸ்டாலின் எனும் ஷேக் டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

Image

Share it if you like it