‘இந்தா வாயின்கோ’: திராவிட மாத சிறப்பு பாடல் வெளியீடு!

‘இந்தா வாயின்கோ’: திராவிட மாத சிறப்பு பாடல் வெளியீடு!

Share it if you like it

வெங்காய லேயர் பாடலை தொடர்ந்து தற்போது திராவிட மாதம் எனும் சிறப்பு பாடல் ஒன்றை ‘இந்தா வாயின்கோ’ எனும் பிரபல யூடியூப் இணையதள ஊடகம் வெளியிட்டுள்ளது. இக்காணொளி, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பிரபல எழுத்தாளர் சுப்பு எழுதிய திராவிட மாயா என்னும் ஆங்கில புத்தகம் சென்னை மைலாப்பூரில் உள்ள ஆர்.ஆர். சபாவில் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் பிரபாகரன், துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் குருமூர்த்தி, வின் டிவி அதிபர் தேவநாதன் யாதவ் மற்றும் பா.ஜ.க. சேர்ந்த பல முன்னோடிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதாவது;

தி.மு.க.வை வீழ்த்துவது மிக எளிது. அது சக்கரவியூகம் போல. வெளியே ஒரு மீடியா மற்றும் ஆங்கில புலமை கொண்ட ஒரு வெளிப்புற லேயர். அதை நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து உள்ளே சென்றால் அங்கு அட்டாக் லேயர் இருக்கும். இவர்களிடம் நாம் அறிவார்ந்து ஏதாவது பேசினால் கெட்ட வார்த்தைகளில் பேசுவார்கள். நம்மை வசைப்பாடி அடக்கப் பார்ப்பார்கள்.

இந்த அட்டாக் லேயரை மீண்டும் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்து சென்றால் அங்கு குறுநில மன்னர்கள் லேயர் இருக்கும். இவர்களை முதல் இரண்டு லேயர்களும் எப்போதும் பாதுகாத்து கொண்டு இருக்கும். இவர்கள் வசம் பல ஏரியாக்கள் தலைமுறை தலைமுறையாக பிரித்து கொடுக்கப்பட்டிருக்கும். இவர்களுக்கு ஒரு விஷயத்தையும் சுயமாக செய்யும் ஆற்றல் இருக்காது.

ஒரு விமானம் பிடித்து டெல்லிக்கு தனியாக சென்று வர கூட இயலாதவர்கள். இந்த லேயரையும் நாம் அதே பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்துக் கொண்டு சென்றால், உள்ளே குடும்ப லேயர் இருக்கும். இந்த குடும்ப லேயரிடம் தான் அனைத்து ஆளுமையும் இருக்கும். அதையும் நாம் பெரிய வெங்காயத்தை உரிப்பது போல் உரித்தால், உள்ளே கோபாலபுர லேயர் இருக்கும். முதல் நான்கு லேயர்களையும் உரித்து போட்டு விட்டால், இந்த கோபாலபுரம் லேயரை எளிதில் வீழ்த்தி விடலாம். வெங்காயத்தில் உள்ளே எதுவுமே இல்லை என்பது போல் இந்த கோபாலபுர லேயரில் எந்த சரக்கும் இல்லை என்று இருந்தார்.

இதனை, மையமாக பிரபல இணையதள ஊடகமான ’இந்தா வாயின்கோ’ ஞாயிறு ஸ்பெஷல் என்று வெங்காயப் பாட்டு ஒன்றை வெளியிட்டு இருந்தது. இக்காணொளி, பொதுமக்களிடம் அந்நாட்களில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் தான், திராவிட மாதம் எனும் பெயரில் சிறப்பு பாடல் ஒன்றை அதே இணையதள ஊடகம் இன்று வெளியிட்டு இருக்கிறது. இக்காணொளியும், தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Share it if you like it