தி.மு.க.வை சேர்ந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் கமிஷன் கேட்பது போல காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நான் தமிழக முதல்வரானல் நேர்மையான ஆட்சியை வழங்குவேன் என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி வழங்கி இருந்தார். இதனை, நம்பி தமிழக மக்கள் ஸ்டாலினை அரியணையில் அமர்த்தினர். விடியல் கிடைக்கும் என நம்பிய மக்களுக்கு துன்பமும், துயரமும் மட்டுமே கிடைத்துள்ளது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், ஆளும் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களில் தொடங்கி எம்.எல்.ஏ. வரை பொதுமக்களுக்கு கொடுக்கும் தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதே நிதர்சனம். தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது பஜ்ஜீ கடை, பிரியாணி கடை, சுண்டல் கடை, என கழக கண்மணிகள் செய்த சம்பவங்கள் ஏராளம். இப்போது, ஆட்சி அதிகாரம் அவர்களது கையில் உள்ளது. இதனால், லஞ்சம், லாவண்யம் தமிழகத்தில் தொடர்ந்து தலைவிரித்து ஆடி வருகிறது.
அந்த வகையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் தாம்பரம் எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஆர். ராஜா சென்னையில் உள்ள தொழிற்சாலை ஒன்றிற்குள் புகுந்து ஊழியர்களை மிரட்டி இருந்தார். எதிர் தரப்புகளிடம் கமிஷனை பெற்றுக் கொண்டு தி.மு.க. எம்.எல்.ஏ. இவ்வாறு நடந்து கொண்டதாக எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சுமத்தி இருந்தன.
இதனிடையே, தி.மு.க.வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வில்வநாதன். இவர், தனது கட்சி அலுவலகத்தில் வைத்து ஒன்றிய பெரும் குழு தலைவர் உள்ளிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அப்போது, தமக்கு கமிஷன் வேண்டும் என எம்.எல்.ஏ. வெளிப்படையாக கேட்பது போல அக்காணொளி அமைந்துள்ளது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
எனது கட்சியை சேர்ந்தவர்கள் தவறான வழியில் சென்றால் நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று கூறிய ஸ்டாலின் இப்போது என்ன செய்ய போகிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.