பொய் வழக்கு ரத்து: தி.மு.க.விற்கு மீண்டும் நீதிமன்றம் குட்டு!

பொய் வழக்கு ரத்து: தி.மு.க.விற்கு மீண்டும் நீதிமன்றம் குட்டு!

Share it if you like it

பா.ஜ.க நிர்வாகி மீது தி.மு.க அரசால் புனையப்பட்ட பொய் வழக்கு மீண்டும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு ஹிந்து தெய்வங்கள் தொடர்ந்து இழிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், U2Brutus’ என்கிற பெயரில் ட்விட்டரில் இயங்கி வரும் மைனர் விஜய் என்பவன், தில்லை நடராஜர் நடனமாடுவது குறித்து மிகவும் ஆபசமாகவும், கொச்சையாகவும் விளக்கம் கொடுத்து அண்மையில் காணொளி ஒன்றினை வெளியிட்டு இருந்தான். இதற்கு, தமிழகத்தை கடந்து இந்தியா முழுவதும் கடும் கண்டனங்களும், புகார்களும் தெரிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால், விடியல் அரசு இன்று வரை விஜய் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே நிதர்சனம்.  

ஆனால், தி.மு.க அரசின் தவறுகளை பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தேசிய சிந்தனை கொண்டவர்கள் சுட்டிக்காட்டினால் உடனே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், பா.ஜ.க.வின் ஓ.பி.சி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா மீது வழக்கு. அதேபோல, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் செயற்குழு உறுப்பினருமான கல்யாணராமன் மீது வழக்கு. இதனை தொடர்ந்து, பிரபல ஊடகவியலாளர் கார்த்திக் கோபிநாத் மீது வழக்கு என விடியல் அரசு தொடர்ந்து தனது அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி வருகிறது.

அந்த வகையில், பா.ஜ.க ஊடகப்பிரிவு மாநில செயலாளர் செளதா மணி மீது தி.மு.க அரசு அண்மையில் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தது. இந்நிலையில், பா.ஜ.க. வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சிறப்பாக வாதாடி, பா.ஜ.க. நிர்வாகிக்கு விடுதலையை பெற்று கொடுத்து இருக்கின்றனர். விடியல் அரசின் பொய் வழக்குகளை நீதிமன்றத்தின் வாயிலாக தொடர்ந்து பா.ஜ.க தகர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it