மத்திய அமைச்சர் நிகழ்ச்சி புறக்கணிப்பு: ஜாதி பாகுபாடு காரணமா?

மத்திய அமைச்சர் நிகழ்ச்சி புறக்கணிப்பு: ஜாதி பாகுபாடு காரணமா?

Share it if you like it

மத்திய அமைச்சர் எல்.முருகன் விழாவை புறக்கணித்த அமைச்சர் பொன்முடிக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், கோவை பாரதியார் பல்கலை பட்டமளிப்பு விழா அண்மையில் நடை பெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி, தமிழக கவர்னர் ஆர்.என். ரவி மற்றும் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து பேசிய அமைச்சர் பொன்முடி, நாங்கள் எந்த மொழியையும் எதிர்க்கவில்லை. எந்த ஒரு மொழிக்கும் எதிராக நாங்கள் இல்லை. இந்தி படிக்க விரும்பினால் அதை வெளியே சென்று படிக்கலாம். இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். இந்தி படித்தவர்கள் தான் தமிழ் நாட்டில் பானி பூரி விற்கிறார்கள் என்று கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சர்ச்சைக்கு உரிய வகையில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் தான், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறேன். இணை வேந்தரான என்னை கலந்து ஆலோசிக்காமல் விழா தேதியை தன்னிச்சையாக ஆளுநர் முடிவு செய்திருக்கிறார். விழாவுக்கு இணை அமைச்சர் எல்.முருகனை சிறப்பு விருந்தினராக அழைக்க வேண்டிய நோக்கம் தான் என்ன? கல்வியாளர்களை அழைப்பது தான் நடைமுறை. ஆளுநரின் செயல்பாடுகள் பா.ஜ.க.வுக்கு பிரச்சாரம் செய்வது போல் இருக்கிறது என்று குற்றச்சாட்டினை முன் வைத்து இருக்கிறார்.

Image
கல்வியாளர் மட்டுமே பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்படுவார்கள் – பொன்முடி.. பேரறிஞர் தயாநிதி மாறனும் மூதறிஞர் உதயநிதியும் கலந்து கொண்ட பொழுது கிளிக்கியது.

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சராகி இருக்கிறார் என்றால் அது டாக்டர் எல். முருகன் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. மிகவும் பின் தங்கிய சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு மிக உயரிய பதவிகளை வழங்கி அழகு பார்த்தவர் பாரதப் பிரதமர் மோடி. சமூக நீதி, சுய மரியாதை, சமத்துவம் என்று ஊர் முழுக்க தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க.வோ அல்லது வி.சி.க.வோ எல்.முருகன் பதவி ஏற்ற சமயத்தில் இருந்து இன்று வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கவில்லை. இதற்கு மாறாக, தி.மு.க கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய ரகளையை எந்த ஒரு தமிழனும் மறந்திருக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில் தான், மத்திய அமைச்சர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்து இருக்கிறார். ஏன் இந்த திடீர் புறக்கணிப்பு? அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அமைச்சர் பொன்முடி புறக்கணித்தாரா? என சமூக ஆர்வலர்கள் பலர் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பட்டமளிப்பு விழா அறிவிப்பு

Share it if you like it