எம்.பி.யை தொடர்ந்து தி.மு.க. அமைச்சரின் வக்கிர புத்தி!

எம்.பி.யை தொடர்ந்து தி.மு.க. அமைச்சரின் வக்கிர புத்தி!

Share it if you like it

ஹிந்துக்களின் புனிதமான காவியை கொடியை ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அவமதிப்பு செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

தி.மு.க.வின் ஆட்சி தற்பொழுது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வராக, ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறை பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. அந்த வகையில், ஹிந்து விரோத பேச்சுக்கள், ஆலயங்கள் இடிப்பு மற்றும் பட்டினப்பிரவேச விழாவிற்கு தடை என ஹிந்துக்களின் உணர்வுகளை காயப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து விடியல் ஆட்சியில் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், தர்மபுரியில் உள்ள ஏரி ஒன்றினை சீரமைப்பதற்கான பணி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தர்மபுரி எம்.பி. என்கிற முறையில் தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி. செந்தில்குமார் கலந்து கொண்டார். அப்போது, வழக்கமாக அரசு விழாக்களில் செய்யப்படுவதுபோல, அந்த விழாவிலும் ஹிந்து முறைப்படி சடங்கு சம்பிரதாயங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், செந்தில்குமாரோ எப்படி ஹிந்து மதப்படி மட்டும் பூஜை செய்யலாம்? கிறிஸ்தவ பாதிரியாரை கூப்பிடுங்கள். இஸ்லாமிய இமாமை கூப்பிடுங்கள் என்றபடி ஆவேசமாக பேசி இருந்தார். இவரது, பேச்சு ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது போல அமைந்து இருந்தது என பல்வேறு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தன.

இப்படியான, பல்வேறு கொடுமைகளை கடந்த ஒரு வருடத்திற்கும் மேல் ஹிந்துக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான், அமைச்சர் சேகர் பாபு புகழ் பெற்ற கோவில் ஒன்றிற்கு சென்று இருக்கிறார். அப்பொழுது, அங்கு கட்டப்பட்டு இருந்த காவி கொடிகளை பார்த்து இருக்கிறார். இதனால், கோவமடைந்த அமைச்சர் சேகர் பாபு, உடனே அவற்றை அகற்றுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதுதான், ஹிந்துக்கள் மத்தியில் மீண்டும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருபுறம், தி.மு.க. எம்.பி. மறுபுறம் அமைச்சர் என மாறி மாறி ஒரு குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it