கொடுத்த கடனை கேட்டவர்களை அரிவாளோடு துரத்திய தி.மு.க. நிர்வாகி!

கொடுத்த கடனை கேட்டவர்களை அரிவாளோடு துரத்திய தி.மு.க. நிர்வாகி!

Share it if you like it

கொடுத்த கடனை திருப்பி கேட்ட நபர்களை அரிவாளோடு தி.மு.க நிர்வாகி விரட்டி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

விடியல் தருவேன் என தமிழக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். இவர், முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பின்பு, சட்டம் ஒழுங்கு தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அந்த வகையில், அக்கட்சியை சேர்ந்த கழக கண்மணிகள் பொதுமக்களுக்கு கொடுத்து வரும் தொல்லைகள் ஒருபுறம் இருக்க, கவுன்சிலர்களின் உறவினர்கள் இன்று வரை தொடர்ந்து பல்வேறு அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதே நிதர்சனம்.

இதுதவிர, எங்கு பார்க்கினும் லஞ்சம், ஊழல் தலை விரித்து ஆடி வருகிறது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விடியல் அரசு மீது பல்வேறு ஊழல் புகார்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர, தமிழக காவல்துறை டி.ஜி.பி.யின் கண்ட்ரோலில் இல்லை என்று கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்துவது போன்று தி.மு.க. கவுன்சிலர்களின் ஆணவ போக்கு தொடர்கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில், சென்னை கொடூங்கையூர் சோலையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவி. இவர், தனது சொந்த நிலத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். இப்பகுதியின், 34-வது வார்டு பெண் கவுன்சிலராக இருப்பவர் சர்மிளா காந்தி. இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவரது, கணவர் இங்கு வீடு கட்ட வேண்டும் என்றால் தனக்கு 10 லட்ச ரூபாய் கப்பம் கட்ட வேண்டும் என்று நிலத்தின் உரிமையாளருக்கு மிரட்டல் விடுவது போன்ற காணொளி அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இச்சம்பவத்தின், சுவடு மறைவதற்குள் நீலகிரி மாவட்டம் மேலூர் ஊராட்சி மன்ற துணை தலைவராக இருப்பவர் நாகராஜ். இவர், மேலூர் ஊராட்சியில் பள்ளி காம்ப்பவுன்ட் சுவர் கட்டியதற்கு ஊராட்சி தர வேண்டிய பணத்திற்கு 5% தனக்கு கமிசன் தர வேண்டும் என மிரட்டிய காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படியாக, தி.மு.க.வின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, திருச்சி மாவட்டம் தெற்கு தத்தமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவர், தி.மு.க.வின் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவரது, மனைவி நித்யா தி.மு.க. ஒன்றிய கவுன்சிலராக இருந்து வருகிறார். வெற்றிச்செல்வனுக்கு, கொடுத்த கடனை குணசேகரனும் அவரது தம்பியும் திருப்பி கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த கவுன்சிலரின் கணவர் அவர்களை அரிவாள் கொண்டு நடுரோட்டில் துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை யாரோ ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து இணையத்தில் பரவ விட்டு இருக்கிறார். இதையடுத்து, இக்காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நான் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்போது எல்லாம் கூறுகிறாரோ? அப்போது, எல்லாம் இதுபோன்ற சம்பவங்கள் முன்பை காட்டிலும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it