கழக முன்னோடிகளிடம் சிக்கி திணறும் தமிழ் மொழி!

கழக முன்னோடிகளிடம் சிக்கி திணறும் தமிழ் மொழி!

Share it if you like it

கழக தொண்டனில் தொடங்கி எம்.எல்.ஏ, அமைச்சர் என அனைவரிடமும் தமிழ் மொழி படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல என்பதற்கு கீழ்கண்ட காணொளிகளே சிறந்த உதாரணம்.

தமிழ் மொழியின், உண்மையான பாதுகாவலர்கள் நாங்கள் தான் என்பது போல தி.மு.க.வின் அடிமட்ட தொண்டனில் தொடங்கி அக்கட்சியின் தலைவர் வரை பேசி வருகின்றனர். ஆனால், இவர்கள் தமிழ் மொழியை வளர்த்த லட்சணத்தை நாடே நன்கு அறியும்.

தி.மு.க. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போது தமிழ் மொழியை உயர்த்தி பிடிக்கும். ஆனால், ஆளும் கட்சியாக, மாறிய பின்பு தனது கொள்கைகள் அனைத்தையும் காற்றில் பறக்க விட்டுவிடும் என்பதை அனைவரும் நன்கு அறிவர். விடியல் முதல்வர் ஆட்சியில் இருக்கும் சமயத்தில் தான், 10- ஆம் வகுப்பு பொதுதேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் சுமார் 47,000 பேர் தமிழில் பாடத்தில் தோல்வியை தழுவி இருக்கின்றனர். மேலும், தமிழ் வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்த வண்ணம் உள்ளது.

Image

இப்படியாக, விடியல் ஆட்சியில் தமிழ் மொழி மெல்ல மெல்ல தேய்ந்து வருகிறது. தலைவன் எவ்வழியோ, தொண்டரும் அவ்வழி, என்பதற்கு ஏற்ப தி.மு.க. தலைவர் ஸ்டாலினில் தொடங்கி அக்கட்சியை சேர்ந்த எம்.பி. எம்.எல்.ஏ. அமைச்சர் என அனைவரும் தமிழ் மொழியை கொலை செய்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில், தி.மு.க.வை சேர்ந்த கழக கண்மணிகள் தமிழ்த்தாய் வாழ்த்தினை மிக அழகாக பாடி தமிழை வளர்ந்த லட்சணத்தை கீழ்கண்ட காணொளி வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

இதனை தொடர்ந்து, சென்னை மேயர் பிரியா பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர் தமிழ் மொழியில் உரையாடிய விதத்தை இன்று வரை நாம் கேட்டு கொண்டே இருக்கலாம்.

இதையடுத்து, தி.மு.க.வின் மூத்த தலைவரும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினருமான மருத்துவர் எழிலன் சட்ட சபையில் தமிழ்மொழியில் ஆற்றிய சொற்பொழி இதோ உங்கள் பார்வைக்கு. இதுதவிர, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் என்று இந்த பட்டியல் நீண்ட கொண்டே செல்கிறது.


Share it if you like it