கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சோகம்: “நெஞ்சுக்கு நீதி” பார்த்த முதல்வர்!

கல்நெஞ்சையும் கரைய வைக்கும் சோகம்: “நெஞ்சுக்கு நீதி” பார்த்த முதல்வர்!

Share it if you like it

கல்குவாரியில் சிக்கியவர்களின் குடும்பங்கள் கதறி கொண்டு இருக்கும் இந்நிலையில், ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை பார்க்க நேரத்தை செலவிட்ட தமிழக முதல்வருக்கு குவியும் கண்டனங்கள்.

‘நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம், அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் உள்ளது அந்த கல்குவாரி. கடந்த சனிக்கிழமை 6 தொழிலாளர்கள் இங்கு பணி புரிந்து வந்துள்ளனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட நிலச்சரிவில் தொழிலாளர்கள் பாறை குவியலுக்குள் சிக்கி கொண்டனர். இதையடுத்து, அடுத்த நாள் காலை (ஞாயிறு) முருகன், விஜய் என இருவர் உயிரோடு பத்திரமாக தீயணைப்பு துறை வீரர்களால் மீட்கப்பட்டனர். அன்று மாலையில் மீட்கப்பட்ட மூன்றாம் நபர் செல்வம் என்பவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களின் நிலை என்னவென்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. தமிழகத்தை கடந்து இந்தியா முழுவதும் இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்குவாரியில் இறந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறவேண்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின். தனது மகனும் சேப்பாக்க எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் நடித்த ”நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தின் சிறப்பு காட்சியை தனது குடும்பத்துடன் கண்டு களித்துள்ளார். இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் கடும் கோவத்தையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதியின் “நெஞ்சுக்கு நீதி” படத்தை பார்த்து வாழ்த்திய முதல்வர் Entertainment பொழுதுபோக்கு

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்த குழந்தை சுஜீத் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி இருந்தது. அப்பொழுது, ஆட்சியில் இருந்த அ.தி.மு.க குழந்தையை உயிரோடு மீட்க பல்வேறு நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டன. இதுதவிர, துணை ராணவம் மற்றும் கர்நாடகவில் இருந்து உயர் ரக வாகனங்கள் எல்லாம் வரவழைக்கப்பட்டு இருந்தது. ஆனால், துரதிருஷ்டவசமாக குழந்தையை உயிரோடு மீட்க முடியவில்லை. பெற்றோர்களின் அலட்சியமே சுஜீத் மரணத்திற்கு காரணம் என அந்நாட்களில் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு இருந்தன. இதையெல்லாம், கருத்தில் கொள்ளாமல் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க.வின் மீது வீண் பழியை சுமத்தி அன்றைக்கு அரசியல் செய்தவர் இதே ஸ்டாலின் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

குழந்தை சுஜீத் மரணத்திற்கு அன்று கதறிய ஸ்டாலின் இன்று கல்குவாரியில் சிக்கியவர்களின் நிலைமையை குறித்து கவலைக் கொள்ளாமல் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி இருப்பதன் மூலம் தி.மு.க.வின் உண்மையான சுயரூபம் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தங்களது உறவுகளை இழந்தவர்கள் கதறி அழும் காணொளி கல்நெஞ்சையும் உருக்குவதாக அமைந்து உள்ளது. இதுகுறித்த செய்தியினை ஜெ நியூஸ் வெளியிட்டுள்ளது அதன் லிங்க் இதோ.

சுஜித்தை மீட்க ராணுவத்தை ஏன் அழைக்கவில்லை? மு.க.ஸ்டாலின் கேள்வி | mk stalin  raise question to tamilnadu government, why didn't call the army to rescue  Sujith? - Tamil Oneindia
குழந்தை சுஜீத்திற்கு அஞ்சலி செலுத்திய ஸ்டாலின்


Share it if you like it