மாணவியர் குடிப்பதற்கு  அமைச்சர் பொறுப்பு அல்ல: நீதிமன்றத்தில் தி.மு.க. வாதம்!

மாணவியர் குடிப்பதற்கு அமைச்சர் பொறுப்பு அல்ல: நீதிமன்றத்தில் தி.மு.க. வாதம்!

Share it if you like it

சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வைத்திருக்கும் வாதம் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி மற்றும் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தனர். எனினும், இந்த ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகளை கடந்து விட்டது. ஆனால், பூரண மதுவிலக்கு இன்றுவரை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை.

அதேவேளையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதுதவிர, பள்ளி மாணவிகள், குடும்ப பெண்கள் மது குடிப்பது போன்ற காணொளிகளை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும்.

இப்படிப்பட்ட சூழலில் தான், பள்ளி மாணவர்கள் குடித்து விட்டு ரகளை செய்தால் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி? பொறுப்பு ஏற்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தரப்பு ( தி.மு.க.) வழக்கறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்தான, காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Image
Image

Share it if you like it