இலங்கை உதவியிலும் ஊழலா? பலே தி.மு.க!

இலங்கை உதவியிலும் ஊழலா? பலே தி.மு.க!

Share it if you like it

இலங்கைக்கு கொள்முதல் செய்யப்படும் அரிசியில் ரூ.54 கோடி தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு அதிகாரிகள் பகீர் தகவல்.

ரத்த கண்ணீர் வடித்து வரும் இலங்கையை கண்டு உலக நாடுகள் வேதனையுடன் பார்த்து வருகிறது. அந்நாடு இந்த நிலைமைக்கு செல்ல எங்கும் ஊழல், எங்கும் லஞ்சம், என்பதே இதற்கு முக்கிய காரணம் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் எப்படி சன்குடும்பமோ அதேபோன்று மகிந்த ராஜபக்சே குடும்பமும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

இலங்கையில் தற்பொழுது மிக கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, பெட்ரோல் டீசல் அந்நாட்டில் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், எங்கு பார்த்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம், பசி, பஞ்சம், பட்டினி தலைவிரித்து ஆடி வருகிறது. இதுதவிர, வாகனங்கள் பலமணி நேரம் சாலைகளில் காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தொடர் மின் வெட்டு காரணமாக இலங்கை மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் துயரநிலையை கண்டு பல்வேறு நாடுகள் அவ்வபொழுது உதவி செய்து வருகின்றன. ஆனால், பா.ஜ.க தலைமையிலான மோடி அரசு தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. சுதந்திரத்திற்குப் பிறகு மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள தீவு தேசத்திற்கு இந்திய அரசாங்கம் பல்வேறு உதவிகளை செய்துள்ளது. “அண்டை நாடாகவும், நமது நாட்டின் பெரிய சகோதரராகவும், இந்தியா எப்போதும் எங்களுக்கு உதவி வருகின்றன. இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். தற்போதைய சூழ்நிலையில் எங்களைப் பொறுத்தவரை, உயிர்வாழ்வது எளிதானது அல்ல. நாங்கள் வெளியே வருவோம் என்று நம்புகிறோம் என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா இந்தியா செய்த உதவியை நினைவு கூர்ந்து இருந்தார்.

இதையடுத்து, இலங்கை மக்களின் துயர் துடைக்க தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ முன்வந்தது. அந்தவகையில், அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பால்பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவற்றை அனுப்பி வைக்க முடிவு செய்தன. இதற்கு, மத்திய அரசு உடனே அனுமதியும் வழங்கி இருந்தது. தமிழக அரசு செய்த உதவிக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது நன்றியினை தெரிவித்து இருந்தார்.

அந்தவகையில், இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்புவதற்காக, நுகர் பொருள் வாணிப கழகம், சந்தையை விட அதிக விலைக்கு அரசி வாங்குவதால், தமிழக அரசுக்கு 54 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்கிற பகீர் தகவல் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Image

Share it if you like it

One thought on “இலங்கை உதவியிலும் ஊழலா? பலே தி.மு.க!

  1. எங்கெல்லாம் ஊழல் நடத்தி சன் குடும்பத்தை உலகின் மிக பெரிய கார்ப்பரேட் டாக வலம் வர.. எல்லா வகையான வேலைகளையும் செய்வார் 🦥

Comments are closed.